• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Aug 13, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரத்தில் செயல்படக்கூடிய அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பள்ளி குழந்தைகளுக்கு தரமான சீருடைகள் வழங்க வேண்டும் குழந்தைகளின் நலனை நமக்கு முக்கியமானது விரைவில் பள்ளி சீருடைகள் மாற்றப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்,

மேலும் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் அமைச்சர் பேசும்பொழுது பெண் குழந்தைகள் அணியக்கூடிய பாவாடை மிகவும் சிறிதாகவும் வசதி குறைவாக உள்ளது அதை மாற்றி தனியார் பள்ளிகளில் மாணவிகள் எவ்வாறு பெட்டிக்கோட் முறையில் அணிகின்றார்களோ அதை போல் மடிப்புகள் அதிகம் வைத்து நீங்கள் தைத்துக் கொடுக்க வேண்டும் , மாதிரிகளாக இரண்டு செட் தைத்து எனக்கு தர வேண்டும் அதை வைத்து அதேபோல் குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அரசு சார்பில் சமூக நலத்துறை மூலம் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் மற்றும் 13 வயதிலிருந்து 16 வயது உள்ள இளம் பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சத்துமாவுகள் தயார் செய்யும் இடத்தையும் ஆய்வு செய்து தரமாக வழங்க வேண்டுமென அறிவுரைகளை வழங்கினர்.

சத்து மாவு மூலம் செய்யப்படும் உணவு பண்டங்களை சாப்பிட்டு பார்த்த சமூகத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா.