• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,

ByP.Thangapandi

Aug 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் தேனியிலிருந்து- திருமணம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து தேனி மாவட்டம் போடி என்ற ஊருக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று இரவு

தனது நண்பர் கீழ மாத்துரைச் சேர்ந்த ராமர் என்பவர் உடன் நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் காற்றுக்கு இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தாக கூறப்படுகிறது., உடன் சென்ற ராமர் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.,

இந்நிலையில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி சுரேஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் தனியார் பேருந்துக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டி, விபத்தில் உயிரிழந்த சுரேஷ்குமார்-ன் உறவினர்கள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

இதனால் உசிலம்பட்டி- பேரையூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

சம்பவம் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய் கணேஷ் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.,