• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிப்ஸ் பாக்கெட்டில் அழுகிய நிலையில் உருளைகிழங்கு

ByT.Vasanthkumar

Feb 7, 2025

பெரம்பலூர் அருகே BINGOO சிப்ஸ் பாக்கெட்டினுள் அழுகிய நிலையில் உருளை கிழங்கு: BINGOO நிறுவனத்தை தடைசெய்ய கோரி, காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரை அடுத்த களரம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் குமார் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடையில் BINGOO சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதனை பிரித்து பார்த்த போது, அதனுள் அழுகிய நிலையில் உருளை கிழங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவற்றை அறிந்த சதீஷ்குமார் குழந்தைகளிடமிருந்து அதனை பறித்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இது போன்ற அழுகிய உருளை கிழங்குகளை குழந்தைகள் வாங்கி சாப்பிட்டால் என்னாவது.?? ஆகவே இது போன்று கேடு தரும் உணவு பொருளை தயார் செய்யும் BINGOO நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று வெளியிட்டுள்ள காணொளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து சதீஷ்குமார் உணவு பாதுகாப்பு துறையில் அளித்துள்ள புகாரின்‌பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.