• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு..,

ByK Kaliraj

Sep 10, 2026

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியஓடைப்பட்டி, சின்னதம்பியாபுரம், பெத்துரெட்டிபட்டி , முள்ளிசெவல் மற்றும் உப்பத்தூர் ஆகிய கிராமத்தில் தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌,

நீங்கள் எனக்கு ஒரு பெருமையை சேர்த்துக் கொடுத்து உள்ளீர்கள். இந்த தேர்தலில் பத்தாவது முறையாக என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நான் உங்களிடம் வாக்கு சேகரித்தேன். அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய வகையில் இந்த தேர்தலில் என்னை வெற்றி பெற செய்த உங்களுக்கு என்னுடைய சார்பாகவும் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அப்போது கப்புரெட்டிபட்டி என்ற கிராமத்தில் நன்றி தெரிவித்த போது அப்போது அப்பகுதி மக்கள் 100 நாள் ஊதியம் வரவில்லை என்று தெரிவித்தனர் அப்போது பேசிய கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நான் அமைச்சராக வரும் பொழுது 100 நாள் வேலை வேண்டுமென்று கேட்டீர்கள் நிறைவேற்றி கொடுத்தேன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக வந்த பொழுதும் 100 நாள் ஊதியத்தை கேட்டு உள்ளீர்கள் அதுவும் கூடிய விரைவில் வரும் என்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கூறினார்.