• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

விபத்தில் சிக்கிய திமுக கிளை செயலாளர்-நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..,

ByVelmurugan .M

May 15, 2026

நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சிவசங்கர் வெற்றி பெற்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று திருமாந்துறை, பென்னகோணம், சு.ஆடுதுறை ஒகளூர் , அத்தியூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தார்.

அப்போது திருமாந்துறை சுங்க சாவடி அருகே அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பளித்தனர்.

இதனிடையே நோவா நகர் திமுக கிளைச் செயலாளர் முருகேசன் என்பவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று விபத்து ஒன்றில் சிக்கி முகத்தில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நன்றி தெரிவிப்பதற்காக திருமாந்துறை பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர் எம்.எல்.ஏ இந்த தகவல் அறிந்து அவருடைய வீட்டிற்கு சென்று நலம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.