• Tue. Feb 18th, 2025

மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை

Byதி.ஜீவா

Feb 5, 2025

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கோவி.லெனின், கவிஞர்.சல்மா கலந்து கொள்கின்றனர் என மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மத்திய பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தலைமை கழக ஆணைக்கினங்க, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அறிவுறுத்தல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, ஓரவஞ்சனையான நிதிப்பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான
கோரிக்கைகளுக்குப் பிறகும் எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகிவற்றிற்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டம் , குன்னம் கலைஞர் திடலில், 08.02.2025, (சனிக்கிழமை), மாலை 6.00 மணிக்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் கோவி.லெனின் – கவிஞர்.சல்மா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில்
கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிரணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள்,கழக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.