• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அடிப்படை புரிதலும் இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார்-பெ.சண்முகம் சாடல்..,

ByVelmurugan .M

Apr 19, 2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (19.04.2026) பெரம்பலூர் காந்திசிலை முன்பு மருத்துவர் ஜெயலட்சுமி ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் திமுக கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து,

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசுகையில்,

மாநில உரிமைகளை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை தோழமைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பேராட்டம் நடத்தியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவார்,
மாநில உரிமைகளை அடமானம் வைக்கக்கூடிய அணியானது அதிமுக ஆகும். தான் தோன்றித்தனமாக செயல்படக் கூடியவர் இன்னொருவர் வந்திருக்கிறார். ஆக இந்த மூன்று பேருக்கும் தான் தற்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னை சம்பந்தமான எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
பேசுகிறார். பெண்கள் இட ஒதுக்கீட்டை இதனுடன் இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமாக பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு பாஜ அரசு இதை செய்துள்ளது.

உண்மையில் சொல்லப்போனால் பாஜவுக்கு பெண்கள் மீது கடுகளவும் அக்கறை கிடையாது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை பெயரை மாற்றி அந்தத் திட்டத்தை முழுவதும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகின்றது. அதனால்தான் முன்பு ஒன்றிய அரசு முழுவதும் வழங்கிய தொகையை தற்போது ஒன்றிய அரசு 60% சதவீதமும், மாநில அரசு 40% தர வேண்டும் என பிரித்து அந்தத் திட்டத்தை முழுமையாக முடக்க பார்க்கின்றது, தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதிலும், திட்டங்கள் ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது
என தெரிவித்தவர்.

மேலும் பிஜேபி போட்டியிடுகின்ற 27 தொகுதிகளிலும் அவர்களை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் அமையும், மற்றொருவர் வந்து உள்ளார் (விஜய்) தற்போது, அவர் சைக்கிள் ஓட்டுவது பெரிய செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அவர் நான் முதலமைச்சராக வேண்டும் என சொல்கிறார் அவர் முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார், சைக்கிள் ஓட்டுவது பிரச்சாரம் இல்லை, ஏராளமான இளைஞர்கள் அவரை பின் தொடர்கின்றனர், இளைஞர்கள் பிரச்சினை பற்றி அவர் ஏதேனும் இதுவரை பேசி உள்ளாரா என கேள்வி எழுப்பிய அவர்
முதலமைச்சர் அவர்கள் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

பாஜக அரசு அதிமுக என்ற முகமூடி அணிந்து கொண்டு போட்டியிடுகின்றது. சினிமாவில் எப்படி ஒரே நாளில் முதலமைச்சர் ஆகின்றார்களோ அதே போல் கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் விஜய் உள்ளார். அவர் பெறவேண்டிய வாக்குகள் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது, அதனால் தான் அவர் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார் அவரும் தோல்வியடைவார். அவருக்கு அளிக்கக்கூடிய வாக்கு நோட்டாவுக்கு அளிக்க கூடிய வாக்காக அமையும், எனவே வெற்றி பெறக்கூடிய உள்ள அணியாக உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள், ஏற்கனவே திமுக அரசு செய்த நலத்திட்டங்கள் தொடர மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், திமுக வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் து.ஆதவன்,ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் குதரத்துல்லா உள்ளிட்ட பலர் உடனிந்தனர்.