மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி விலக்கு அருகில் உசிலம்பட்டி நகராட்சி மின்மயானம் மற்றும் குப்பை கிடங்கு அமைந்துள்ளது.,

இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டு பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்கள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.,

இதில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் தீ வைத்து எரிக்கப்படுவதால் மல மலவென தீ எரிந்து புகை மண்டபமாக செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.,
மேலும் நகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் எந்த பயன்பாடும் இல்லை எனவும் குற்றச்சாட்டுகின்றனர்.,

தமிழக அரசு நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்து அப்புறப்படுத்தி விவசாய நிலங்களையும் எங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,








