• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம்..,

Byமுகமதி

Sep 10, 2026

ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம் கடந்த ஆறாம் தேதியில் இருந்து பன்னிரண்டாம் தேதி வரை ஒரு வாரக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக 10.9.2026 ஆம் தேதி காலை 10மணியளவில் காவிரி கடைமடைப்பகுதி பாசன சங்கத் தலைவர் கொக்குமடை டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கரு.இராமநாதன் துவக்கி வைத்து விவசாயிகள் படும் அல்லல் குறித்தும் மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் விவசாயிகளுக்கு இருக்கும் சிரமங்கள் குறித்தும் மின்சாரத்தையும் ஆழ்குழாய் கிணறுகளையும் நம்பி இருக்கும் பல பகுதிகளில் மின்சாரம் தட்டுப்பாட்டால் அந்தப் பகுதி விவசாயிகள் படம் சிரமங்கள் குறித்தும் விரிவாக எடுத்துப் பேசினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தினுடைய ஒன்றியச் செயலாளர் கராத்தே செல்வராஜ், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேகதாது அணை கட்டும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்றும் வேளாண் விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் தளத்தை முழுமையாக, அகற்ற வேண்டுமென்றும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர் , உதவியாளர்களை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினார்கள். பிரச்சார இயக்கத்தில் பல்வேறு விவசயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.