பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் அவர்களது இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது குறித்தும், விடுதலை நாளேட்டிற்கு சந்தா சேர்ப்பது குறித்தும், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் 29.05.2026 அன்று பெரம்பலூர் வருகையின்போது வரவேற்பளிப்பது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்.01.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மாண்புமிகு எசனை நடராசன் அவர்களது பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு 29.05.2026 அன்று மாலை வருகை தரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் மாண்புமிகு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு பெரம்பலூரில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2.

சூன் திங்களில், மாவட்டத்தின் ஒன்றிய, நகரங்களில் கொள்கை விவாத தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
ஆகிய முக்கிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளர் செந்தூர பாண்டியன்,
மாவட்ட செயலாளர் விசயேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் நடராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




