இந்தியாவில் பெட்ரோல் டீசல் தினசரி உயர் ந்து வருகிறது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிழையில் கடந்த 13 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. மேலும் தேர்தல் நேரத்திற்கு ஏற்ப விலையில் ஏற்ற,இறக்கங்கள் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
கொரோனா முதல் அலை துவங்கிய 2020 மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ராக்கெட்வேகத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது அதன்பிறகு 130 நாட்களுக்கும் மேலாக எந்த வித மாற்றமுமின்றி பெட்ரோல், டீசல் விலை விற்பனையானது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த சிலதினங்களுக்கு முன் பொட்ரோல்,டீசல் விற்பனையில் சரிவு ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. பலரும் பொதுபோக்குவரத்துக்கு மாறிதாகவும் தகவல்கள் வரத்தொடங்கின. இந்நிலையில், தொடர்ந்து 13வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.