• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 11, 2026

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரனேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் மேற்கொண்டார்.அதிகாலை திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்த முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா ஸ்ரீ சனி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பங்கு கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா கூறியதாவது: 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 93 வது வயதில் திருநள்ளாறு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கூறினார்.இந்தியாவில் தற்போதைய அரசின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் பாரதப் பிரதமர் தேவகவுடா தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் மிகவும் வலிமையான தலைவராக திகழ்வதாக தெரிவித்தார்.பொருளாதாரப் பிரச்சினை மற்றும் தற்போது அமெரிக்க இஸ்ரேல் இடையிலான ஓர் பதற்றமான சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு இந்தியாவில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாதவாறு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் விஜய் அரசு குறித்த கேள்விக்கு அடித்தட்டு மக்கள் முதல் இளைஞர்கள் பெண்கள் என பல தரப்பு மக்களும் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் அரசியல் அனுபவம் இல்லாத நிலையிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென கூறினார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் தமிழக முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தந்தது என அவர் கூறினார்.காவிரி நீர் பிரச்சினை குறித்து எழுப்பிய கேள்விக்கு காவிரி நீர் பிரச்சனை அல்ல கர்நாடக மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலை வருவதாகவும் குறிப்பாக பெங்களூர் கோலார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் கர்நாடக மாநிலத்தில் நிலவும் குடிநீர் கட்டுப்பாடு காரணமாகவே காவிரியில் நீர் திறப்பதில் சிரமம் உள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.