• Fri. Jan 17th, 2025

பாஜக தொண்டர்களை குறிவைத்து தாக்குதல்- ஜே.பி.நட்டா கொந்தளிப்பு..

Byகாயத்ரி

Apr 18, 2022

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துக்களால் தாக்குவதாகவும் கூறியுள்ளார்.

தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசை மேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள் மற்றும் பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகம் ஆகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.