• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மாவீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா..,

ByK Kaliraj

Jul 11, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் புதுப்பாளையம் பகுதியில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா*,யாதவர் மகாசபை மற்றும் புதுப்பாளையம் அ.இ.அ.தி.மு.க சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

சாத்தூர் நகர் மற்றும் வட்டார யாதவர் சங்கத் தலைவர். வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் . சண்முகக்கனி முன்னிலை வகித்தார்.

மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுபொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது*

இந்நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் கருப்பசாமி,விவசாய பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன்,சடையம்பட்டி கிளை கழக செயலாளர் சீனிவாசன் மற்றும் யாதவர் சமுதாய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுப்பாளையம் கிளைக் கழகச் செயலாளர் நம்புமாரி செய்திருந்தார்.