• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!

Byமுகமதி

Jul 1, 2026

இந்தியாவில் 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த முதல் பிரதமர் என்கிற வரலாற்றுச் சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பன்முக ஆளுமைகளை விளக்கி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள சாதனை மலருக்கு இந்திய அமைச்சரவை செயலாளர்
டி வி சோமநாதன் ஐஏஎஸ் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

புதுக்கோட்டையை பிறப்பிடமாக கொண்ட டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்
புதுடில்லி தலைமையிடத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடியின் சாதனைகளை அழகிய புத்தகங்களாக உருவாக்கி இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வெளியிட்டு வரும் புதுமையான தொடர் முயற்சிகளுக்கு மத்திய அமைச்சர்கள் மாநில ஆளுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை மலர் அரசியல்வாதிகளின் மத்தியில் மிகுந்த பாராட்டையும் சிறப்பையும் பெற்றுள்ளது.