தூத்துக்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் முன் சிஐடியு மின் ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெர்மல் சிஐடியு செயலாளர் கணபதி சுரேஷ் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் அப்பாதுரை, பேசினார். சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன்,மணவாளன், வையனப்பெருமாள், டென்சிங், சிபிஎம் புறநகர் செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அப்பாதுரை அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தூத்துக்குடியில் இயங்கிவரும்அனல் மின் நிலைய நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 15,000 கோடி ரூபாய் முத வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் இன்று வரை நிரந்தர பணியாளர்கள் யாரும் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதனைஎதிர்த்து சிஐடியு சார்பில் தொடரப்பட்டளத்தில் ரூ.3000 பிடித்தம் செய்யப் வழக்கில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டுமெனவும், நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்இந்த தீர்ப்பை எதிர்த்து அனல்மின் நிலைய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மேலும் தொழிலாளர்களுக்கு அனல் மின் நிலை யத்தில் கழிவறை, குடிநீர், உணவகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தி தரவேண்டும். குறிப்பாக பெண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பிடித்தம் செய்யபட்டு மீதி வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்து வோம் என்றார்.