கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மத்திய அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மார்க்சியகம்யூ. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி .
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மத்திய அரசு தவறி விட்டது இதை மறைக்கவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை பதவியில் இருந்து மாற்றியுள்ளனர் ஆனால் இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.
மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையில் பெட்ரோல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர் .சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல் விலை இவ்வளவு உய்ர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை .
தேசிய புலனாய்வு முகமை மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படாது. உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
மகராஷ்டிராவில் சிறையிலிருந்த ஸ்டேன் சாமி இறந்த நிலையில் மீதமுள்ள 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ேடன் சாமி இறப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் தான் பொறுப்பு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்தனர். ஆனால் அவர்களது சித்துவிளையாட்டு எடுபடவில்லை. அவர்கள் எண்ணம் தமிழகத்தில் எடுபடாது இவ்வாறு அவர் கூறினார் .