• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கிணற்றுக்குள் தத்தளித்த நரியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..,

ByK Kaliraj

Jun 13, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரத்தில் உள்ள விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் அரிய வகை உயிரினமான நரி தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செண்பகராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மோகன், ராமகிருஷ்ணன், பாரத் குமார், ஆனந்தராஜ், மாரிமுத்து, ஆகியோர் அடங்கிய குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி நரியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதைத் தொடர்ந்து நரியை வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.