விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற முதல் முயற்சியாக சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றி துவங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது:
மேகதாது விவகாரத்தில் முதல் எதிரியே மத்திய அரசுதான்.
மறைமுகமாக கர்நாடக அரசிற்கு உதவி செய்து வருகிறார்கள் என்றார்.
2014 ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தைக் கூட்டி அணை கட்டுவதற்கான பணிகளுக்கு நாங்கள் நேரடியாக அனுமதி வழங்க முடியாது ஆனால் நீங்கள் அணை கட்டுவதற்கான பணிகளை துருவங்கள் என மறைமுக உத்தரவு ஒன்றை மத்திய அரசு கர்நாடகாவிற்கு வழங்கியிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படியும், தமிழக அரசின் அனுமதி இல்லாமலும் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மீறி கர்நாடக அரசு அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கியுள்ளது. தற்போதைய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக (Fanatic) நடந்துகொள்கிறார். மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுபடாது. நேரடியாக களத்தில் இறங்கி போராடினால் தான் அதற்கான முடிவுகள் எட்டும்.
தமிழக அரசின் கடந்த ஒரு மாத கால ஆட்சி ‘அருமையாக உள்ளது’ என ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். மேலும், தமிழக அரசு 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அத்துடன் அவர்களுக்குரிய முறையான ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
சேலம் பாலியல் விவகாரம் போன்ற கொடூரங்கள் திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலுமே நடந்து வருகின்றன. இதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குகடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதற்கான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், பாலியல் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் வழங்கக் கூடாது. இத்தகைய கடுமையான தண்டனைகள் மூலமாக மட்டுமே பாலியல் குற்றங்களைக் குறைக்க முடியும். பாலியல் குற்றங்களுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
வருகிற 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. அப்போது தற்போதைய அரசியல் சூழலை ஆராய்ந்து, அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் திமுகவைப் பற்றி எந்தவொரு தவறான கருத்தையும் பேசவில்லை. ஆனால், அவர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள்
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




