• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி..,

ByPuthar Pandian P

Jun 13, 2026

திண்டுக்கல் மதுரை செல்லும் நான்கு வழிச் சாலை கொடைரோடு அருகேயுள்ள பொட்டி செட்டி பிரிவு என்ற இடத்தில் ஒரு கார் மோதிய விபத்தில் 37 வயது மதிக்கதக்க ஆண் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த நபரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பெயர் விலாசம் தெரியவில்லை. இடது மார்பில் கருப்பு மச்சம் வலது கால் கட்டை விரல் அருகில் காய தழும்பு, நீலகலரில் வெள்ளை பாடர் போட்ட வேட்டியும் ஆரஞ்சு வெள்ளை நிறம் கலந்த டவுசர் அணிந்துள்ளார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.