

ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குனர் இஷா அம்பானி நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (ஆர்ஐஎல்) 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் அதன் வாட்ஸ்அப்-ஜியோமார்ட் கூட்டாண்மையை அறிமுகப்படுத்தினார்.பொதுக் கூட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் ஜியோமார்ட்டில் மளிகை சாமான்களை தேடுவது, கார்ட்டில் பொருட்களை சேர்ப்பது, பணம் செலுத்துவது மற்றும் ஆர்டர் செய்வது எப்படி என்பது குறித்த செயல்விளக்கம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு இந்தியரின் அன்றாடத் தேவைகளையும் தீர்க்கும் உயர்தர, மலிவு விலையில் பொருட்களை உருவாக்கி வழங்குவதே இந்த வணிகத்தின் நோக்கமாகும். 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் ஜியோமார்ட், ஹைப்பர்லோகல் டெலிவரி மாடலில் செயல்படுகிறது என்று இஷா கூறினார். மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு செய்திக்குறிப்பில், “இது வாட்ஸ்அப்பில் எங்களின் முதல் எண்ட்-டு-எண்ட் ஷாப்பிங் அனுபவம். மக்கள் இப்போது ஜியோமார்ட்டிலிருந்து மளிகைப் பொருட்களை உரையாடல் மூலம் வாங்கலாம்” என கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் ஃபேஷன், ஆடை, மின்னணுவியல், மளிகை, வீட்டுப் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் கடந்த ஆண்டு முன்னிலையில் இருந்த நிலையில், நெட்மெட்ஸை கையகப்படுத்தியதன் மூலம் மருந்தக சில்லறை விற்பனையிலும் நுழைந்தது.