• Fri. Apr 26th, 2024

ஷியா தலைவர் அரசியலில் இருந்து விலகல் எதிரொலி – வன்முறையில் 20 பேர் பலி

ByA.Tamilselvan

Aug 30, 2022

ஈராக்கில் ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறித்தார் .இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் இதில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார். அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான பிரச்சனையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது
இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *