• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தொழிலாளியை கத்தியால் குத்தி 2 பவுன் தங்க சங்கிலி வழிப்பறி..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாதகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 49).இவர் கோயம்புத்தூரில் சரவணம் பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இடைய பட்டியைச் சேர்ந்த வர்அங்கு தற்போதுசங்கிலி கருப்பு கோவில் திருவிழாநடந்து வருவதால் திருவிழாவுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்தார்.

அதன் பின் நேற்று இரவு 7 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 .15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம்பாலம் பகுதியில் ஊருக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த
4 மர்ம நபர்கள் கர்ணனை வழிமறி த்து கத்தியை காட்டி மிரட்டி பணம் செல் போன் எடுக்கச் சொல்லி கூறி னர். அதற்கு அவர் மறுக்க வேகத் தியால் அவரை குத்தம் முட்பட்ட போது தடுத்து அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. அதற்குள் அவர்கள் கர்ணன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில காயமடைந்த கர்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்த மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகிறார்கள்.