• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….

ByK Kaliraj

May 24, 2026

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோலில் சுமந்த கட்சி காங்கிரஸ்

உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்ததை மறந்து விட்டு பேசுவது தான் நன்றி கெட்டு பேசுவது, உதயநிதி அளந்து பேசி இருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடந்த தினம் இங்கே டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்தனர்

அதன் காரணமாகவே நாங்கள் தமிழர் கட்சி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தோம்.

வாக்கு எண்ணிக்கை தினமான 4ம் தேதி அன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கும்போதே பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்க திட்டமிட்டது.

4ம் தேதி மூன்று மணியளவில் பாஜகவின் முக்கிய தலைவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

பாஜக அதிமுகவிற்கும் திமுகவிற்கும் கனெக்டிங் கால் போட்டுவிட்டது, இதே தகவலை சி.வி. சண்முகத்திடமும் கேட்கலம்.

குறிப்பாக விஜயை ஆட்சி அமைக்க விட கூடாது என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்தனர். இதையெல்லாம் வெளியில் சொல்லாமலும் அவர்களுடன் செல்லாமலும் இருந்தோம்.

திமுகவின் அனைத்து கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என தவ்வி குதித்தவர் உதயநிதி ஸ்டாலின்

விஜயை முதல்வராக விடக்கூடாது என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடைசியில் தோற்று விட்டார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு தர முடிவெடுத்தார்கள் பாஜகவின் இந்த முயற்சிக்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்துள்ளது.

இதெல்லாம் வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருந்தோம் பொய் நாடகங்களை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்

வெகு விரைவில் பாஜகவின் துணையோடு அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைப்பார்கள் பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள்.

திமுகவின் எந்தெந்த கொள்கைகளுக்காக நின்றதோ அதை அனைத்தையும் திமுக இலக்க நேரிடும் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் குறித்து வண்ணமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது, உதயநிதியின் வன்மம் நேற்று தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் காரர்களைப் பொறுத்தவரை எதையும் திருப்பி அடிப்பவர்கள்

பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழகத்திற்குள் வந்து விடக்கூடாது நாங்கள் எந்த தியாகத்தையும் செய்வோம்.

காங்கிரஸ் திமுகவை நம்பியும் அவர்கள் சொல்லும் மதச்சார்பின்மை, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தோம் ஆறு மாத காலம் ஆட்சியை ஏதும் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் வாயில் வடை சுடுவது என்பது விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்து விட்டது.

அதிமுக திமுக கூட்டணி ஆட்சி என்ற பிளானை காங்கிரஸ் உடைத்து பிளாப் ஆக்கியுள்ளது பாஜக தமிழகத்திற்குள் வருவதை காங்கிரஸ் தடுத்தது என்பதை உதயநிதி ஸ்டாலின் தெரிந்து கொண்டதால் பிதட்டுகிறார்.

தவெக கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்

நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என விஜய் முனைப்பு காட்டி வருகிறார், கமிஷன் கரப்சன் இல்லாத அரசாங்கத்தில் நாங்கள் அங்கம் வகித்துள்ள இந்த ஆட்சி தொடரும்

திமுக கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கூறி வருகிறார்.

தோல்விக்கு காரணம் இவர்கள்தான் என எதிரியை காங்கிரஸ் கட்சியினர் என்று திமுகவினர் காட்டுகிறார்கள். எப்பொழுதுமே தோல்வி அடைந்தவுடன் திமுகவினர் பேசும் பேச்சு தான் இது

தவெக காங்கிரஸ் விசிக இணைந்துள்ள கூட்டணிக்கு விரைவில் பெயர் சூட்டப்படும் ஒருமித்த கூட்டணியாகவும் பலமான கூட்டணியாகவும் இருக்கும்.

இந்த அரசிற்கு உரிய நேரம் கொடுக்க வேண்டும், போரை பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை மிக கவனமாக விஜய் கையாள்வார் என நம்புகிறேன்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக முதல்வர் கவனத்தோடு அதிகாரிகளை இன்னும் வேகப்படுத்துவார் என நம்புகிறேன்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிபி யை அனுப்பி வைத்தது பெண் அதிகாரி மூலமாக தீவிர விசாரணை நடத்தியது வரவேற்கத்தக்கது

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சமுதாய பிரச்சனையாக மாறி உள்ளது, காவல்துறையினர் தடுக்க வேண்டிய பிரச்சனையாக இல்லாமல் சமுதாயப் பிரச்சினையாக மாறி உள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது

சட்டம் வாயிலாக கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க தமிழக அரசு முன் வரும்