கழுகுமலை அருகே லட்சுமி புரத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜூதலைமை வகித்து புதிய பேவர் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா சண்முகபாண்டி வரவேற்றார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் காமராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஸ்ரீதர், தொழிலதிபர்கள் முத்தால்ராஜ், அந்தோணிபாஸ்கர், கிளை செயலாளர்கள் பாலமுருகன், வைரவன், நாகராஜ், ஜெயராமன், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.