• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் வீடு புகுந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .!!

ByKalamegam Viswanathan

May 24, 2026

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் காலணியை சேர்ந்த. உத்தமன் மகன் கண்ணன். 21.. தவெக கட்சி பிரமுகரான இவர் பெயிண்டராக வேலை பார்த்து. வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கீழ மாத்தூர் கிராமத்தில் வீடு புகுந்த கண்ணன் வீட்டிற்குள்ளே தூங்கிகொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிய பொற்றோர் எழந்தபோது அங்கிருந்து கண்ணன் தப்பி சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி.மற்றும் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கண்ணன். 21 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.