மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது., இப்பள்ளியில் கடந்த 1969-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 57 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு சங்கமிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.,

இதில் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சின்னப்பன், பாண்டியன், திருவரங்கம் உள்ளிட்டவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுகளை வழங்கி சிறப்பு செய்தனர்.,
இதில் முன்னாள் மாணவர்கள் நீதித்துறை, ஆசிரியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சூழலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி பருவ அனுபவங்கள், நண்பர்கள் தொடர்பான நினைவுகள் மற்றும் பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.,
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர். பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைத்தனர்.,
இவ்விழாவில் கலந்து கொண்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகள் கடந்தாலும் பள்ளி நாட்களின் நினைவுகள் மறக்க முடியாதவை என்றும் நண்பர்களை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.,

தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்., தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரியாணி விருந்து உணவு அருந்திய முன்னாள் மாணவர்களிடையே உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.,
இதற்கு முன்னதாக வந்தாரை வரவேற்கும் வயோதிக வாலிபரே வருக வருக என வரவேற்கின்றேன் எனவும் என்றும் பதினாறு வயது பதினாறு அருகில் வா வா விளையாடு என பாடல் பாட்டி முன்னாள் மாணவர் வரவேற்பு செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.





