• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா..,

Byமுகமதி

May 24, 2026

தமிழ்நாட்டில் இன்றையக் கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பயிலும் பத்து வயதுடைய மாணவியின் நூல் வெளியீட்டு விழா தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நூலி;ன் ஆசிரியருக்கு இப்போதுதான் பத்து வயது ஆகிறது. அவர் இப்போது அரசுப் பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்புக்கான தேர்வை எழுதிவிட்டு அவர் தேர்வாகுவாரா? தேர்வு முறையில் தோல்வியைத் தழுவுவாரா என்ற கேள்விக்குறி தொக்கி நிற்கும் நிலையில்தான் அவர் சொந்த முயற்சியில் எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமமான நெய்வேலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த சின்னஞ்சிறு மாணவிகளில் ஒருவர்தான் அபிதாஸ்ரீ. இவருக்கு இவரது வகுப்பாசிரியரான ராஜா என்பவர் தொடர்ந்து வீட்டுப்பாடங்களை எழுதச் சொல்லி வந்திருக்கிறார். அந்த வகையில் அப்பா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார். அந்த வகுப்பில் அதாவது அப்போது மூன்றாம் வகுப்பு பயின்று வந்த மாணாக்கார்களில் அபிதாஸ்ரீயும் ஒரு கட்டுரையை அப்பா என்ற தலைப்பில் எழுதி வந்து வகுப்பாசிரியரிடம் காண்பித்திருக்கிறார்.

அந்தக் கட்டுரையானது மாணவ மாணவியர் மட்டுமல்லாது பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டப் பட்டு அதாவது மாணவர்களின் பெற்றோர் அமர்ந்திருக்கும் அவையில் வாசிக்கப் பட்டதுடன் பெற்றோர் அனைவரின் முகத்திலும் மலர்ச்சி. அந்தக் குழந்தையான அபிதாவின் பெற்றோர் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அதற்குக் காரணம் அந்த மாணவியின் தந்தை முருகேசன் அவர்கள் என்ன பாடுபட்டு, எந்தளவுக்கு தனது வியர்வையை மட்டுமல்லாது ரத்தத்தையும் சிந்தி காயம் பட்டு, அந்த வேதனைகளைத் தாங்கிக் கொண்டு ஊதியம் பெற்று அந்த ஊதியத்தில் தன்னைப் படிக்க வைத்திருக்கிறார் என்பதை உணர்வு பூர்வமாக அந்தக் கட்டுரையில் தனது எழுத்துகளால் வடிவமைத்திருந்தார்.

அது மட்டுமல்ல, தனது தந்தை முருகேசனின் உழைப்புக்கேற்றவாறு அதற்குச் சற்றும் குறைவில்லாமல் தனது படிப்பு, கல்வியில் முன்னேற்றம் காட்டிய ஆசிரியர் ராஜா அவர்களின் சிரத்தைiயும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கொடுத்த தலைப்புகள் ஒவ்வொரு கட்டுரையில் வெளிப்பட்டிருந்தாலும் அப்பா என்ற கட்டுரையின் தாக்கமும் வகுப்பாசிரியர் ராஜா அவர்களைப் பற்றி அந்தப் பெண் அபிதா எழுதிக்குறிப்பிடப் பட்டிருந்த கட்டுரையும் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்த அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது. புத்தக வெளியீட்டுக்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சி வெள்ளம் பெருகும் என்றால் இந்த நூல் வெளியீட்டுக்கு வந்திருந்தவர்களின் கண்களில் உணர்ச்சி பூர்வமாகக் கண்ணீர் வெள்ளம் வழிந்தோடியது. அதற்குக் காரணம் அபிதாவின் உணர்வு மட்டுமல்லாது உணர்ச்சிபூர்வமாக எழுத்துகளின் வடிவம்தான்.
இந்தப் புத்தகத்திற்கான முதல்படி அந்த மாணவியின் மூன்றாம் வகுப்பு என்ற போதிலும் ஐந்தாம் வகுப்பு நிறைவடையும்போதுதான் கனவு நிறைவேறி இருக்கிறது. அதற்குக் காரணம் அவரது எழுத்தார்வத்தைப் புரிந்து கொண்ட பலரின் ஒத்துழைப்பு என்றாலும்கூட அந்தச் சிறுமியின், சிறு வயது மாணவியின் எழுத்தாற்றலைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சந்திரா ரவீந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வை.மத்துராஜா, கவிஞர் ஜீவி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மா.சின்னதுரைஈ நன்றியுரையாற்றிய இந்த பள்ளி மாணவியை எழுத்தாளராக உருவாக்கிய ஆசிரியர் ராஜா உள்ளிட்ட அனைவரது பேச்சுகளும் ஒவ்வொரு புத்தகங்களைத் தாங்கி நிற்கின்றன. ஆனாலும் ஒரு பள்ளி மாணவி எழுதி வெளியிட்டிருக்கும் அபிதாஸ்ரீயின் முதல் எழுத்து என்ற இந்த நூல் வரலாற்றுப் பதிவாக மாறியிருக்கிறது.