இன்றைய காலத்தில் கொரானா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்கள், உடலில் ஏற்படும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளுக்கும் ஆங்கில மருந்தை விட சித்தா ஆயுர்வேத மருத்துவ முறை மிகவும் சிறப்பானதாக விளங்குகிறது.
சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கொரானா 3வது அலை வாரமல் இருக்க பாதுகாப்பாக இருப்பது குறித்து, மதுரை முனிச்சாலை பகுதியில் சோலைமலை இந்தியன் மருந்தகம் சார்பாக சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் நிறுவனரும் மருத்துவருமான வரதராஜன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் மஹாலட்சுமி கலந்துகொண்டு கபசுர குடிநீர், சித்தா மருந்துகளை வழங்கினார். தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மூலிகை மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா 3வது அலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள கபசுர குடிநீர் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.