தடையை மீறி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என கையில் விளக்கேற்றி மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை திமுக அரசு தடை செய்துள்ளதைக் கண்டித்து மதுரையில் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேதாஜி ரோடு பாலதண்டாயுத சுவாமி முருகன் கோவில் அருகே இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்துவதற்கு தடை விதித்துள்ள திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அனைவரும் கையில் விளக்கை ஏற்றி திமுக அரசிற்கு நல்ல புத்தியை வழங்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.