• Sun. Feb 9th, 2025

முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் மனு!

By

Sep 2, 2021 ,
DMK

தேவகோட்டை நகரின் மக்கள் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஆவின்பால் பூத் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்துநிலையம் அருகே பிரசித்திபெற்ற தியாகிகள் பூங்கா உள்ளது. இந்த இடம் அதிக போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதியாகும். இங்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன் ஆவின் பால் பூத் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவகோட்டை திமுக நகர செயலாளர் பெரி பாலா தலைமையில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு மதுசூதனனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இங்கு பால் பூத் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமாக அமையும் என்றும், அடிக்கடி சாலை விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.