• Wed. Apr 24th, 2024

மும்பையில் எருமைப்பால் விலை உயர்வு!

Byகாயத்ரி

Aug 30, 2022

மும்பையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் எருமைப்பால் விலை ₹5 உயர்த்தப்படுகிறது.

மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (எம்எம்பிஏ) பண்டிகை காலத்தை முன்னிட்டு எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு ₹73ல் இருந்து ₹78 ஆக உயர்த்தியுள்ளது.மேலும் இந்த விலை உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறவை விலங்குகள் மற்றும் அவற்றின் உணவுப் பொருட்களின் விலை 15% – 25% உயர்ந்துள்ளதால் விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என்று MMPA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *