தேவையான பொருட்கள்:
உருட்டு உளுந்தம் பருப்பு (தோல் நீக்கியது) -1ஃ4கிலோ,
சீனி-1ஃ2கிலோ,
பச்சரிசி மாவு-2கைப்பிடி,
சிறிது-உப்பு,
கேசரி பவுடர்-1ஸ்பூன்
திக்கானபாலிதீன் கவர்,
ரீபைண்ட் ஆயில்-1லி
செய்முறை:
உளுந்தை 1மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து கொண்டு வடைக்கு அரைப்பது போல் (நீர் விடாமல்) கெட்டியாக அரைத்து கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்த மாவுடன், பச்சரிசி மாவு, கேசரி பவுடர், சிறிதளவு உப்பு போட்டு பிசைந்து வைத்து கொண்டு பாலிதீன் பேப்பரில் கோன் போன்று செய்து கொள்ளவும். சீனியை சிறிது நீர் விட்டு பாகு போல காய்ச்சி வாய் அகண்ட பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் கோனில் மாவு வைத்து கோனின் நுனியை வெட்டி முறுக்கு பிழிவது போல எண்ணெய்யில் பிழிந்து விடவும். நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு அரைமணி நேரம் ஊறிய பின்னர் சாப்பிடலாம்.
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்