• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 14, 2023

கார பட்டாணி ரெசிபி:

தேவையான பொருட்கள்:

நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வர மல்லி – 1ஃ2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1ஃ2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1
பட்டாணி – 500 கிராம்
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ருசிக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை பட்டாணி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றி உருகியதும், அதில் சீரகம், கடுகு போட்டு தாளித்ததும், அதில் முழு மல்லி, ஏலக்காய் பொடி, நறுக்கி வச்ச பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து, சில நிமிடம் நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம் நல்லா வதங்கினதும், அதில் பட்டாணி, நறுக்கி வச்ச இஞ்சி, பூண்டு, ருசிக்கேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து, சில நிமிடம் பட்டாணி நன்றாக வதக்கவும்.
மேலும் பட்டாணியானது ஓரளவு நன்கு வெந்தபின், இறுதியில் அதில் பிழிஞ்சி வச்ச எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கிளறியபின் இறக்கிவைத்து, நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லிதழையைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், காரமான பட்டாணி ரெசிபி தயார்!