• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பக்ரீத் பண்டிகை தொழுகையில் கலந்து கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ்..,

Byமுகமதி

May 28, 2026

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகை தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் நேற்று முதல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாநகரில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது பர்வேஸ் கலந்து கொண்டார்.

அவருடன் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள்.