சென்னை திரும்பியதும் கனமழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்றார். பின்னர், இரவு சென்னைக்குத் திரும்பிய அவர், ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மழை பாதிப்பு கட்டளை மையத்துக்குச் சென்று, நிலவரத்தை ஆய்வுசெய்தார். கட்டளை மையத்தில்…
672 நகைக்கடன் வாங்கியுள்ள நபர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரியசாமி பதில்
கடந்த இரண்டு நாள்களாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மக்கள்நலன் சார்ந்து வாதப் பிரதிவாதம் தொடர்ந்து வருகிறது. ஆளும் கட்சியானது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சியான அதிமுகவின் குற்றச்சாட்டு. இதில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் இப்போது…
மதுரையில் திருடுபோன 115 செல்போன்கள் ஒப்படைப்பு..
மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந்…
சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்யும் கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சமூக விரோதிகளின் கூடாரமாகும் கோத்தலூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கோத்தலூத்து கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கொடியவர்களின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு…
மெட்ரோ ரயில் சேவை மாற்றம்!
ஜனவரி 1 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது! சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) வழக்கம் போல்…
பிப்ரவரி 23, 24 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம்.., தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி மாதம் 23 24 ஆகிய தேதி இரண்டு நாட்களில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் மயில் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மதுரை தமிழ்நாடு…
மதுரையில் தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு, பம்பிங் ஸ்டேஷன், மின்வாரிய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் துப்புரவு தொழிலாளர்கள்…
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது..!
தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லட்சுமி)-க்கு 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.…
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை.., சட்டப்பூர்வமாக சந்திப்பார் முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டி..!
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்பட 4 பேரிடம் விருதுநகர்…





