• Fri. Feb 14th, 2025

பிப்ரவரி 23, 24 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம்.., தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு..!

Byகுமார்

Dec 30, 2021

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி மாதம் 23 24 ஆகிய தேதி இரண்டு நாட்களில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் மயில் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.


மதுரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மதுரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி அலுவகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மயில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


பின்னர் அதன் பொதுச் செயலாளர் மயில் அவர் கூறும்போது..,


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, தேசிய கல்வி கொள்கை 2020 திரும்பப் பெறுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கைகளை கைவிடுவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த, தேச நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் பிப்ரவரி 23 24 ஆகிய இரண்டு நாட்களில் அகில இந்திய வேலை நிறுத்தத்தை நடத்துவதாக 10 மத்திய தொழிற்சங்கங்கள், 150க்கும் மேற்பட்ட ஊழியர் அமைப்புகளும் அறிவித்திருக்கின்றன.


அந்த அடிப்படையில் அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதென இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. அந்த அடிப்படையிலே எங்களுடைய அமைப்பைச் சேர்ந்த தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்களுடைய இயக்க உறுப்பினர்கள் அந்த இரண்டு நாட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேமாதிரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறையை எங்களுடைய மாநில செயற்குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் இணைக்கப்பட்ட பல்வேறு கிராமங்களில் பணியாற்ற கூடிய ஆசிரியருடைய முன்னுரிமை அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படாதவாறு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சொந்த ஒன்றியத்திற்கு செல்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றும் என்னுடைய செயல் குழுவானது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.


ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் அதிரடி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய பதவி உயர்வு வாய்ப்பை இழந்து இருக்கின்றார்கள். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவித்த தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் இன்றைக்கு வரை அவர்களுக்கு அந்த பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட வில்லை. எனவே பதவி உயர்வு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அந்த வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்ற கூடிய தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு என்று சொல்லக்கூடிய கல்வித் தகவல் மேலாண்மை நாள்தோறும் பதிவு செய்வது வரவு செலவு கணக்குகளை நாள்தோறும் இணையதளத்தில் பதிவு செய்வது என்ற தேவையற்ற பணிகளை கொடுக்கிறார்கள்.

இதனால் ஆசிரியர் வந்து அந்த இணைய வசதி கிடைக்காமல் மிகவும் மன உளைச்சலோடு பணியாற்றக் கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. ஒரு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளை பராமரிக்க மிகவும் பள்ளிக்கல்வித் துறையிலிருந்து அதிகாரிகள் உத்தரவிடுகிறார்.

இதனால் ஆசிரியருடைய கற்பித்தல் பணியை மேற்கொள்ள முடியாமல் நிர்வாகப் பணியை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு ஏற்படக்கூடிய பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும், தேவையற்ற புள்ளி விவரங்கள் பதிவு பதிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடக் கூடாது என என்னுடைய மாநில செயற்குழு பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக் கொண்டிருக்கிறது

பேட்டி: மயில், பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி