


மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு, பம்பிங் ஸ்டேஷன், மின்வாரிய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் இணைந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு 300க்கு மேற்பட்டவர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.;

பின்னர் மதுரை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர.; மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு ஒப்பந்த பணியாளர்கள் தெருவிளக்கு பணியாளர்கள், கழிவு நீர் ஊற்ற பணியாளர்கள், பாதாளச் சாக்கடைப் பணியாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர் உள்பட 500 பேரை திடீரென மதுரை மாநகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட்ட மற்றும் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். இந்த போராட்டத்தினால் மதுரை மாநகராட்சியில் இதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

