மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந் தேதி மாலை 5.00 மணியளவில் E1 புதூர் காவல் நிலையத்தில் வைத்து மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவின்படி, மதுரை மாநகர் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு , மேலும் இச்சொத்துகளின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ஆகும்.