ஜனவரி 1 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) வழக்கம் போல் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். அதேபோல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் , மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் . மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் .
2022 ஜனவரி மாதம் முதல் மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ இரயில் வரும் 2022 முதல் காலை 05:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.