தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த முயற்சி – பலர் கைது
காரைக்குடியில் தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த சுப.உதயகுமார் உட்பட 20 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் அணு உலை போராட்ட குழு தலைவரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான…
*பள்ளி சென்ற மாணவர்களுக்கு மருதிப்பட்டி இளைஞர் மன்றம் சார்பாக வரவேற்று நிகழ்ச்சி*
மருதிப்பட்டியில் நேற்று அரசுபள்ளி மாணவ மாணவியர்களை வரவேற்று உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு மருதிப்பட்டி இளைஞர் மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 120 மாணவ மாணவியர்களை பூக்கள் தூவி கைதட்டி உற்சாகப்படுத்திஇனிப்பு லட்டு மற்றும் பேனா பென்சில் கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த…
வடிவேலு பாணியில் ரோட்டை காணவில்லை என பனங்குடி கிராம மக்கள் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ளது பனங்குடி கிராமம். இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள நடுவளவு தெரு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையாக விளங்குகிறது. இந்த நடுவளவு தெருவில் அமைந்துள்ள சர்ச்க்கும், கிராமத்தை அடுத்துள்ள…
100 நாள் வேலைத்திட்ட நிலுவை ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – கே.ஆர்.பெரியகருப்பன்
100 நாள் வேலைத்திட்ட நிலுவையில் உள்ள ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் அரளிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய…
பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!..
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்சிங்கம்புணரியைச் சேர்ந்த சேவுகமூர்த்தி வயது 23, பரியாமருதிப்பட்டியைச் சேர்ந்த பூமிகா வயது 19, இவர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்ததாக தெரிகிறது. தற்பொழுது சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு…
மருதுபாண்டியர் குருபூஜை – பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய இருவர் கைது!..
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க வாகனங்களில் வந்து திரும்பியவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களில் மேல் கூரையில் ஏறி நடனமாடியும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும் உள்ளனர். மேலும், சிவகங்கை…
கொட்டும் மழையிலும் திட்டமிட்டபடி 31 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்மாற்றிகள்…
சிவகங்கை நகரில் தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக இன்று ஒரே நாளில் 31 லட்சம் மதிப்பில் 4 மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 62 லட்சம் ரூபாய் செலவில் 8 மின் மாற்றிகள்…
திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய பாசிசவாதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசாலையில், திரிபுரா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய பாசிசவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரிபுராவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பெண்களுக்கு…
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
கீழடியில் தமிழக முதல்வர் தமிழர்களின் நகர நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைத்த கீழடி அகழாய்வு நடைபெற்ற தளங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கீழடியில் ஏழாவது அகழாய்வு பணி நிறைவுற்ற நிலையில் அதனை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.…
வழியில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள் – போலீசார் பாராட்டி பரிசளிப்பு…
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியை சேர்ந்தவர்கள் அஜித் மற்றும் விக்னேஷ் இருவரும் நண்பர்கள். கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களான இவர்கள் இன்று காரைக்குடிக்கு புத்தாடைகள் வாங்க வந்துள்ளனர். அப்போது வழியில் கீழே 50 ரூபாய் கட்டு ஒன்று கிடப்பதை கண்டனர். யாருடைய பணம்…