

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியை சேர்ந்தவர்கள் அஜித் மற்றும் விக்னேஷ் இருவரும் நண்பர்கள். கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களான இவர்கள் இன்று காரைக்குடிக்கு புத்தாடைகள் வாங்க வந்துள்ளனர்.
அப்போது வழியில் கீழே 50 ரூபாய் கட்டு ஒன்று கிடப்பதை கண்டனர். யாருடைய பணம் என்பது தெரியாமல், அதனை உடனே காரைக்குடி வடக்கு காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் ராஜ்குமார், மாணவர்களின் நேர்மையை பாராட்டி பேனாக்களை பரிசளித்தார். சக காவலர்களும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில், அஜித் மற்றும் விக்னேஷ் இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
