

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசாலையில், திரிபுரா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய பாசிசவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திரிபுராவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பெண்களுக்கு நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகள், கடைகளுக்கு தீ வைப்பு, மசூதிகள் சூறையாடல் என பல்வேறு வன்கொடுமைகளை அரங்கேற்றிய ஆர்எஸ்எஸ் பாசிச சக்திகளை கண்டிக்காமல் இருந்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் மிஸ்பாஹி கண்டன உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி உடனடியாகக் கிடைக்க கூறி கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் திருப்பத்தூர் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.