
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க வாகனங்களில் வந்து திரும்பியவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களில் மேல் கூரையில் ஏறி நடனமாடியும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும் உள்ளனர். மேலும், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இது குறித்து அந்தந்த பகுதி கிராம, நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவியில் பதிவாகிய காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் வாகனங்களை அதிவேகமாக இயக்கிய மதுரையை சேர்ந்த ஆண்டிசாமி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கவியரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
