

சிவகங்கை நகரில் தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக இன்று ஒரே நாளில் 31 லட்சம் மதிப்பில் 4 மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 62 லட்சம் ரூபாய் செலவில் 8 மின் மாற்றிகள் இதுவரை மாற்றபட்டது. குறைந்த மின் அழுத்தம், அதிகம் பழு உள்ள இடம் என இரண்டு விதமாக மின்னழுத்தம் குறைபாடு உள்ளதை கண்டறிந்து மின்மாற்றி மாற்றபடுகிறது.
சிவகங்கையில் 07.05.2021 முதல் இன்று வரை நகர் பகுதியில் மட்டும் 10 ட்ரான்ஸ்பர்மர் மாற்றபட்டுள்ளது. சிவகங்கை காரைக்குடி திருப்பத்தூர் மானாமதுரை உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் மொத்தமாக சேர்த்து மின்மாற்றி மாற்றிட 273 கோடிக்கு மதிப்பீடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசின் உத்தரவின் பேரில் 252 புதிய டிரான்ஸ்பார்மர் மாவட்டம் முழுவதும் அமைக்க திட்டமிட்டு இந்த மாத கடைசிக்குள் 105 டிரான்ஸ்பார்மர் அமைக்க திட்டமிடபட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தங்கு தடையின்றி மின்னழுத்த குறைபாடுகளை நீக்கவும் மின்சாரம் வழங்கிட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.
மின் நுகர்வோர்களுக்கு வடகிழக்குப் பருவமழையினால் மின்கட்டமைப்பில் ஏற்படும் இடர்பாடுகளை விரைந்து சீரமைத்து தடையற்ற மின்சாரம் வழங்க பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் , செயற்பொறியாளர் முருகையன், சிவகங்கை உதவி செயற்பொறியாளர் காத்தமுத்து, சிவகங்கை மின் வாரிய உதவி பொறியாளர் அசோக்குமார்
உள்ளிட்ட அதிகாரிகள் பணியாளர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி 4 மின்மாற்றிகள் இன்று அமைத்தனர்.
வாணியங்குடி பகுதியில் இந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. வாணியங்குடி பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தியும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
