

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ளது பனங்குடி கிராமம். இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள நடுவளவு தெரு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையாக விளங்குகிறது.
இந்த நடுவளவு தெருவில் அமைந்துள்ள சர்ச்க்கும், கிராமத்தை அடுத்துள்ள விவசாய நிலங்கள், இடுகாடு மற்றும் பிற பயன்பாட்டிற்கும் கிராம மக்களால் அதிகமாக இச்சாலையை அதிகம் பயணிக்கின்றனர். இத்தெருவில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையை அகற்றிவிட்டு புதிதாக பேவர்ட் பிளாக் கற்கள் பதிக்க இப்பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
நீண்ட நாட்கள் ஆகிய நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது பனங்குடி நடுவளவு தெருவில் கிராமபுற சாலை இணைப்பு திட்டத்தில் மத்திய அரசின் நிதி மூலமாக கடந்த 2021 மே மாதத்தில் அரசு அனுமதி பெற்று கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ. 14 இலட்சம் செலவில் போடப்பட்டதாக தகவல் வெளியனது. இதனை அறிந்த கிராம மக்கள் தகவல் அறியும் சட்டத்தில் ஆவனங்களை பெற்றனர். பழைய சிமெண்ட் சாலையை அகற்றாமல், எந்த பணியும் நடைபெறாமல் ரூ14 இலட்சம் செலவில் சாலை அமைத்தது எப்படி என கொதித்தெளுந்தனர். ஒப்பந்ததாரர் யார் என்று குறிப்பிடாத நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் பணம் எப்படி வழங்கப்பட்டது என இக்கிராமத்தில் உள்ள சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுள்ள இந்த ஊழில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதோடு, ரூ 14 இலட்சத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் இக்கிராம மக்கள். மக்கள் வரி பணத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக போட வேண்டிய சாலையை போடாமல் முழுத்தொகையும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொள்ளை போகியுள்ளது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி திட்ட அதிகாரிகளிடம் புகார் மனுவையும் கிராம மக்கள் வழங்கியுள்ளனர்.
அரசு என்ன தான் திட்டங்கள் போட்டு மக்களுக்கு நிதி வழங்கினாலும், வடிவேலு பாணியில் சாலையை அமைக்காமல் அதிகாரிகளின் துணையோடு பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலை அரசு கடுமையாக தண்டிகாமல் விட்டால், அது அரசிற்கே அவப்பெயரை ஏற்படுத்தி தரும் என்பது நிச்சயம்.
