• Wed. Jan 22nd, 2025

100 நாள் வேலைத்திட்ட நிலுவை ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – கே.ஆர்.பெரியகருப்பன்

100 நாள் வேலைத்திட்ட நிலுவையில் உள்ள ஊதியம் திபாவளிக்குள் வழங்கப்படும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் உறுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் அரளிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பரை கட்டிடங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் 100 நாள் வேலைத்திட்டம் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பேருதவியாக இருந்துள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு ஊதியம் வழங்கவில்லை என கோரிக்கை வந்துள்ளது. அதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிருநாத் சிங்கை டில்லியில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம், நிச்சியமாக 100 நாள் வேலை திட்டத்தின் நிலுவையாக உள்ள ஊதியம் திபாவளிக்குள் வந்து சேறும் என்று உறுதியளித்தார்.

ஏழை எளிய மக்களுக்கு எட்டா கனியாக இருந்து கல்வியை, அவர்களும் படிக்கும் வகையில் கொண்டு சேர்த்தது திராவிடம் தான் என்ற அமைச்சர், அரசு செய்யும் நல்ல காரியங்களை எதிர் வாதம் செய்வது சீமானின் வாடிக்கை என்றார். தமிழகத்தில் 12,525 ஊராட்சியில் உள்ள நூலகங்கள் புதிக்கப்படவுள்ளதாகவும், தேர்தலில் தேல்வி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்த எதிர்கட்சியினர் முன்அறிவிப்பாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக வெளியிடுகின்றனர் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.