

மருதிப்பட்டியில் நேற்று அரசுபள்ளி மாணவ மாணவியர்களை வரவேற்று உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு மருதிப்பட்டி இளைஞர் மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி 120 மாணவ மாணவியர்களை பூக்கள் தூவி கைதட்டி உற்சாகப்படுத்தி
இனிப்பு லட்டு மற்றும் பேனா பென்சில் கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக்கூடம் வராத பிள்ளைகள் மிகவும் ஆர்ப்பரித்து குதூகலமாயினர்.
பிற்காலத்தில் நன்றாக படித்து பெரியதாக சாதிக்க வேண்டுமென இளைஞர் மன்றம் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினால் அரசுபள்ளி உற்சாக நிலையில் இருந்தது. இளைஞர் மன்றத்தின் இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இளைஞர் மன்ற தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற சார்பாக பஞ்சாயத்து தலைவர் திருமதி வெண்ணிலா வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் ஆசிரியர் திரு.அலி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பிள்ளைகளுக்கு லட்டு மற்றும் பேனா பென்சில் வழங்கினர்.
கொரோனா என்னும் நோய்தொற்று அறவே அழிந்து இனிவரும் காலங்களில் அனைத்து மாணவ மணிகளின் பள்ளிப்படிப்பு வாழ்க்கை ஏற்றமாக அமையட்டும் என தெரிவதனர்.
