தமிழகத்தில் ராஜபக்சே ஆட்சி
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் ராஜபக்சே ஆட்சி நடைபெற்று வருவதாகவும் திமுகவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் விருதுநகர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி…
கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு-போலீஸ் குவிப்பு
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் உக்கடம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகம் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் போன்றவை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோவை…
ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மகிழம் மரக்கன்றை நட்டு பசுமை தமிழகம் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்…
மின்கட்டண உயர்வை கண்டித்து
சிவகாசியில் கண்டன பொதுக்கூட்டம்…
எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். சிவகாசியில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 29-ந் தேதி நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து…
பட்டாகத்தியுடன் ரயில் பயணம் … மாணவன் கைது.
ரயில்களில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையில், ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது. மின்சார…
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
தென்காசி மாவட்டம் சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன்…
கொடநாடு வழக்கு அக். 28-க்கு ஒத்திவைப்பு
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டது. தற்போது இவர்கள்…
பெட்ரோல் குண்டு வீசி மன தைரியத்தை குறைத்து விட முடியாது – அண்ணாமலை
கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.காரைக்குடியில் இருக்கும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள்…
ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்காணக்காக வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். விபத்துகளும் தொடர்ந்து எற்படுகிறது. எனவே நீண்ட கால கோரிக்கையான…
பல்வேறு கோரிக்கைகளை சிபிஐ எம்எல் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முருகன் தியேட்டர் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தை வாழ்த்தி மாவட்ட குழு உறுப்பினர் ஹஜ் முகமது,…








