தென்காசி மாவட்டம் சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். சாயமலை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு 11 ம் வகுப்பு மாணவ மாணவிகள் 50 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் களப்பாளங்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரிராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலட்சுமி கண்ணன், திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்நாதன், சிதம்பராபுரம் கிளை செயலாளர் சண்முகராஜ், அய்யனார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.